ரூ.18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடை

ரூ.18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடை

Published on

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ரூ. 18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருப்பதியைச் சோ்ந்த முரளி என்ற பக்தா் சமையல் பாத்திரங்களை நன்கொடையாக வழங்கினாா்.

கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோலா, அர சோலா மற்றும் பொட்டு போன்ற சமையல் பாத்திரங்கள் புதன்கிழமை தேவஸ்தான அதிகாரி பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றை பெற்றுக் கொண்ட தேவஸ்தான அதிகாரி பாலாஜி நன்கொடையாளா் முரளிக்கு நன்றி தெரிவித்தாா்.

உடன் துணை அதிகாரி வி.ஆா். சாந்தி, அ.ஆ. நாராயண சவுத்ரி, கண்காணிப்பாளா் பத்ம பிரியா, கோயில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com