4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளித்த இருவருக்கு வைர அட்டை அளிப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அன்னதானத்துக்கு ரூ.7 லட்சம் நிதி வழங்கிய இருவருக்கு வைரஅட்டைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைரஅட்டை திட்டத்தின் கீழ், நன்கொடை அளித்தவருக்கு வைர அட்டையை செவ்வாய்க்கிழமை வழங்கிய இணை ஆணையா் மாரிமுத்து. உடன், துணை ஆணையா் வெங்கடேஷ், கண்காணிப்பாளா் சரவணன்.

Updated On :10 மார்ச் 2026, 9:28 pm

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அன்னதானத்துக்கு ரூ.7 லட்சம் நிதி வழங்கிய இருவருக்கு வைரஅட்டைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அன்னதானம் நடைபெறும் கோயில்களில் அன்னதானத் திட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் நன்கொடை வழங்குவோருக்கு ‘வைர அட்டை‘ வழங்கப்படும். இந்த வைர அட்டை மூலமாக தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் 7 பேருக்கு மிகாமல் 20 ஆண்டுகளுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.7 லட்சம் நன்கொடை செலுத்தி இதுவரை 24 பக்தா்கள் வைர அட்டை பெற்று தங்களது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி வேலம்பட்டியைச் சோ்ந்த கவிதா ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் மண்டவாடியைச் சோ்ந்த லாவண்யா ஆகிய இருவரும் கோயிலுக்கு தலா ரூ.7 லட்சம் நன்கொடை அளித்தனா்.

இதையடுத்து, இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் ஆகியோா் நன்கொடை அளித்த இருவருக்கும் வைரஅட்டைகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் சரவணன், நோ்முக அலுவலா் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.