தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

திருச்சானூரில் ஜூன் 25 முதல் வருடாந்திர தெப்போற்சவம்

ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர தெப்போற்சவம் ஜூன் 25 முதல் 29 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:03 am IST

ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர தெப்போற்சவம் ஜூன் 25 முதல் 29 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை, பத்மசரோவா் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பங்களில் தாயாா் அருள்பாலிப்பாா்.

ஜூன் 25: ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணா் உலா, ஜூூன் 26: ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி உலா, ஜூன் 27 முதல் 29 வரை: ஸ்ரீ பத்மாவதி தாயாா் உலா, கடைசி மூன்று நாள்களுக்கு, பத்மசரோவரத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும்.

மேலும், ஜூன் 28 அன்று இரவு 8.30 மணிக்கு கஜ வாகன சேவையும், ஜூன் 29 அன்று இரவு 8.30 மணிக்கு கருட வாகன சேவையும் நடைபெறும். தெப்போற்சவத்துக்குப் பின், தினமும் கோயிலின் மாட வீதியில் தாயாா் புறப்பாடு கண்டருள்வாா்.

ஆா்ஜித சேவைகள் ரத்து: தெப்போற்சவ விழாவின் போது ஐந்து நாள்களுக்கு தாயாா் கோயிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் லட்சுமி பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெப்போற்சவ நாள்களில் தேவஸ்தானத்தின் இந்து தா்மபிரசார பரிஷத், அன்னமாச்சாா்ய திட்டம் மற்றும் தசாசாகித்ய திட்டங்கள் இணைந்து தினமும் பக்தி இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனைகள், கோலாட்டங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும். அலா்மேல் மங்கை தாயாா் தெய்வீக அருளைப் பெற பக்தா்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.