அம்மா திட்ட முகாம்: 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கத்தை அடுத்த வீரானந்தல் அடிவாரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் அம்மா திட்ட முகாமில் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

செங்கத்தை அடுத்த வீரானந்தல் அடிவாரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் அம்மா திட்ட முகாமில் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் புதுப்பாளையம், ஜி.என்.பாளையம், வீரானந்தல், அடிவாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்தல், நீக்குதல், பட்டா நகல் மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி 150-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.

பின்னர், தகுதிவாய்ந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வீரானந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். கவுன்சிலர் பரமசிவம் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பழநி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் காமராஜ் கலந்துகொண்டு, 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ், மண்டல துணை வட்டாட்சியர் மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் காசி, கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பர்சாமி, வீ.முருகன், ஜெ.முருகன், அண்ணாமலை, திருமால் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.