அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டெங்கு ஒழிப்புப் பணி: வீடு, வீடாக ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் நடைபெறும் டெங்கு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வீடு, வீடாகச் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:13 am

DIN

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் நடைபெறும் டெங்கு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வீடு, வீடாகச் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மேற்கு கோபுரம் எதிரே உள்ள பே கோபுரத் தெருக்களில் வீடு, வீடாகச் சென்ற ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகியிருந்ததைக் கண்டறிந்தார்.
அந்த டெங்கு கொசுப்புழுக்களை பொதுமக்களிடம் காண்பித்த ஆட்சியர், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும், இந்தப் பகுதியில் உள்ள குப்பையை அகற்றவும், கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். அப்போது, 3 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தினமும் குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.