/

தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்ட மணல் பறிமுதல்

ஆம்பூர் அருகே அனுமதியின்றி அள்ளப்பட்டு தொழில்சாலையில் இருப்பு வைக்கப்பட்ட மணல் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:15 am

DIN

ஆம்பூர் அருகே அனுமதியின்றி அள்ளப்பட்டு தொழில்சாலையில் இருப்பு வைக்கப்பட்ட மணல் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர் அருகே சோமலாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழில்சாலையில் முறைகேடாக மணல் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வருவாய்த் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்தத் தொழில்சாலையின் உரிமையாளருக்குச் சொந்தமான பாலாற்று கரையோரம் உள்ள நிலத்தில் இருந்து மணல் எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்து. சொந்த நிலத்தில் இருந்து மண் அல்லது மணல் எடுக்கப்பட்டாலும் முறையான அனுமதி பெற வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருப்பு வைக்கப்பட்ட 10 யூனிட் மணலை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.