அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மனுநீதி நாள் முகாம்: 329 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட பாதூர் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:21 am

DIN

புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட பாதூர் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 329 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுப்பாளையம் ஒன்றியம், மேல்முடியனூர் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையம் கிராமத்தில் சமத்துவபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார். முகாமில் காரப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுபத்ரா,  சுகாதாரம் குறித்துப் பேசினார். வேளாண்மை துணை அலுவலர் ஜெயசீலன், வேளாண் துறை சார்ந்த அரசுத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக  திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி கலந்து கொண்டு, 170 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை,  கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, சிறு, குறு விவசாயிச் சான்று, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு
மனைப் பட்டா உள்பட பல்வேறு நலத் திட்ட  உதவிகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட  ஊராட்சிக் குழுத் தலைவர் நைனாக்கண்ணு, மாவட்ட வணிகவரித் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் புருசோத்தமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டாட்சியர்கள் செல்வராஜ், முனுசாமி, வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி, ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி: வந்தவாசி வட்டம், ஓசூர் உள் வட்டத்துக்கு உள்பட்ட பாதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் பெ.கிருபானந்தம் தலைமை வகித்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினார். வட்டாட்சியர்கள் ஆர்.முரளிதரன், ஜெ.சேகர், எஸ்.அற்புதம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 6 பேருக்கு வீட்டு
மனைப் பட்டா, 3 பேருக்கு பட்டா மாற்றம், 61 பேருக்கு சிறு, குறு விவசாயிச் சான்று, 86 பேருக்கு இருளர் சாதிச் சான்று உள்பட மொத்தம் 159 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் துணை வட்டாட்சியர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் காஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் ரேவதி, செந்தில்குமார், சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.