47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:23 am

DIN

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார். பொது சுகாதாரத் துறை ஆய்வாளர் சங்கத் தலைவர் டி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் ஏ.பாஸ்கரன், எம்.சரவணன், டி.அசோகர், பி.கே.ஹரிகிருஷ்ணன், வி.பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஒரு சுகாதார துணை மையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற விகிதத்தில் பணியிடங்களை
உருவாக்கி, பணி நியமனம் செய்ய வேண்டும். சுகாதார ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பதவி உயர்வு பணிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
டெங்கு களப் பணியில் உள்ள பிரச்னைகளை முறைப்படுத்த வேண்டும். களப் பணி நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். முன்னிரவு வரை தொடரும் ஆய்வுக் கூட்டங்களை முறைப்படுத்தி பணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.