எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பள்ளியில் வட்டார அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:21 am

DIN

திருவண்ணாமலை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையே இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.மெய்யழகன் தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். வட்டார வள மேற்பார்வையாளர் பி.சின்னராஜ், வட்டார வள பயிற்றுநர்கள் கே.எம்.ஏழுமலை, கே.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கல்வித் துறை சார்பில் பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியில் பள்ளி
ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.