மாநிலப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டுகளில் பங்கேற்கவுள்ள செய்யாறு விவேகா பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டுகளில் பங்கேற்கவுள்ள செய்யாறு விவேகா பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி சக்தி, 8-ஆம் வகுப்பு மாணவர் ஜெயசந்திரன், 9-ஆம் வகுப்பு மாணவர் விஐய்ஸ்ரீனிவாஸ், 10-ஆம் வகுப்பு மாணவி சக்தி பிரேமா, சசிபிரபா ஆகியோர் மதுரை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மாநில அளவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை, கேரம் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி நிறுவனர் சோமசுந்தரம், தாளாளர் சரஸ்வதி, முதல்வர் தண்டபாணி ஆகியோர் மாணவ, மாணவிகளை பாராட்டி வழி அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com