காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், போளூர் ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் ரயில்வே கேட் அருகே நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு
மாவட்ட நிர்வாகி இரா.தங்கராஜ் தலைமை வகித்தார். ஆரணி வட்டாரச் செயலாளர் பி.ரவிச்சந்திரன், செய்யார் வட்டச் செயலாளர் ஏ.பத்ராஜலம், வந்தவாசி வட்டச் செயலாளர் கே.சாகித்பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 25 பேரை கண்ணமங்கலம் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
போளூர்: போளூரில் இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் இரா.ருத்திராச்சாரி தலைமையில் மன்னார்குடி-திருப்பதி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட துணைச் செயலாளர் சின்னக்குட்டி, செல்வராஜ், மாவட்ட மையக் குழு உறுப்பினர் நாராயணசாமி, மாவட்டத் தலைவர் சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ராஜேந்தின், மாவட்டக் குழு சாதிக்பாட்சா, வட்டச் செயலாளர் பாஸ்கரன், வட்டக்குழு ஆறுமுகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ரயில் மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 54 பேரை போளூர் போலீஸார் கைது செய்தனர்.
தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







