செய்யாறில் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் புதன்கிழமை பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
செய்யாறு பங்களா தெருவில் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.15 ஆயிரத்தை அறநிலைத் துறை நிர்வாகிகள் கணக்கெடுத்ததாகத் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் கோயில் அர்ச்சகர் பரத் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். புதன்கிழமை காலை அர்ச்சகர் கோயிலை திறந்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. மர்ம நபர்கள் மதில் சுவர் ஏறி கோயிலுக்குள் நுழைந்து, அலாரமணியின் மின்இணைப்பை துண்டித்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!

மத்திய பிரதேச கல்வி சமூக அலுவலகத்தில் சோதனை: நகை, ரொக்கம் பறிமுதல்!

வீழ்ச்சியடையும் தேங்காய் விலை! அரசு என்ன செய்யப் போகிறது?

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


