திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகம், சென்னை வாசகச் சாலை அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தின.
நிகழ்ச்சிக்கு மைய நூலக நல் நூலகர் சாயிராம் தலைமை வகித்தார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவல் குறித்து பேராசிரியர் வே.நெடுஞ்செழின் நூலாய்வு செய்து, சிறப்புரையாற்றினார்.
நூலாசிரியர் கதாபாத்திரங்களைக் கையாண்ட விதம், மொழி, இலக்கியம் நயம் என அனைத்தையும் பகுப்பாய்வு செய்து அவர் பேசினார். சென்னை வாசகச் சாலையின் மாரிசெல்வம், துரைபாண்டி, ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நல் நூலகர் திருச்செந்தில், நூலகர்கள் ஹேமா, பானு, நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், வாசகர்கள், ஆய்வு மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிறந்த நூல்கள், சிறந்த ஆளுமைகளுடன் "தென்றல்' என்ற பெயரில் இந்த இலக்கியச் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என முதல் நிலை நூலகர் பெ.வள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யமுனையில் உல்லாசப் படகு சேவை: அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு

பாரம்பரிய பண்பாட்டினைப் பின்பற்றும் மலேசியத் தமிழா்கள்!

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கா் தேசிய சுவாமிகள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

