/

விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு

சேத்துப்பட்டு அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை புதன்கிழமை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:05 am

DIN

சேத்துப்பட்டு அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை புதன்கிழமை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேத்துப்பட்டை அடுத்த இராஜமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஏழுமலை. விவசாயியான இவர், புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் தனது விவசாய நிலத்துக்குச் சென்றார்.
இதையடுத்து, இராஜமாபுரம் கிராமத்துக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஏழுமலை குறித்து விசாரித்துள்ளனர். அவர் குடும்பத்தினருடன் விவசாய நிலத்துக்கு சென்றிருப்பதை அறிந்த அவர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை பட்டப்பகலில் திருடிச் சென்றனர். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.