திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை, காம்பட்டு, விளாம்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த சிறு விவசாயிகளின் நிலங்களில் அவர்களின் அனுமதி பெறாமலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்கள் அண்மையில் அமைக்கப்பட்டன.
இதனால், விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் உயர் மின் கோபுரத் திட்டங்களுக்குப் பதிலாக, கேபிள்களாக மாற்றி பூமியில் புதைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் பகுதிகளில் திங்கள்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை மாலை நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி எஸ்.பலராமன் தலைமை வகித்தார்.
சிஐடியு நிர்வாகி பாரி, விவசாயத் தொழிலாளர் சங்கம் எம்.பிரகலநாதன், வழக்குரைஞர் அபிராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஆர்ப்பாட்ட இடத்திலேயே மொட்டை அடித்து, நாமம் போடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாய சங்க நிர்வாகிகள் பன்னீர், ராமதாஸ், வெங்கடேசன், லட்சுமணன், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, கலசப்பாக்கம் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது? யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

மனங்கவரும் மலையாள சினிமா

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் பல்வேறு பணிகள்; காலியிடங்கள்: 53

மண்ணும் மக்களும்
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET


