பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஆசிரியை தீக்குளித்து சாவு: தந்தை போலீஸில் புகார்

செய்யாறு அருகே தனியார் பள்ளி ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக, அவரது தந்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் அளித்தார்.

Updated On :14 மே 2018, 10:56 pm

செய்யாறு அருகே தனியார் பள்ளி ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக, அவரது தந்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் அளித்தார்.
அரக்கோணம் வட்டம், திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் சரஸ்வதி (32). இவருக்கும் செய்யாறை அடுத்த சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரணி என்பவருக்கும் கடந்த 9.9.2012-இல் திருமணம் நடைபெற்றதாம்.
பரணி செய்யாறில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். சரஸ்வதி சித்தாத்தூர் கூட்டுச் சாலையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாராம்.
இந்த நிலையில், சரஸ்வதி உறவினர் ஒருவருடன் செல்லிடப்பேசியில் பேசியது குறித்து பரணி சந்தேகமடைந்து கேட்டுள்ளார். இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சரஸ்வதி உடலில் தீக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து அவரது தந்தை தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தூசி போலீஸில் புகார் செய்தார்.
அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், திருமணமாகி 6 வருடங்களே ஆவதால், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.