கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமர்ஜோதி யாத்திரை ரதம் ஞாயிற்றுக்கிழமை ஆரணிக்கு வந்தடைந்தது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த 18-ஆம் தேதி ராஜீவ் காந்தி அமர்ஜோதி யாத்திரை ரதம் காங்கிரஸ் கட்சியின் சேவாதள ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சஞ்சீவ் தலைமையில் புறப்பட்டு கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சேத்துப்பட்டு வழியாக ஆரணிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தது.
இந்த ரதத்துக்கு ஆரணி எல்லையில் காங்கிரஸ் நகரத் தலைவர் ஜெயவேல் தலைமையில் அந்தக் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதில், நிர்வாகிகள் அசோக்குமார், அருணகிரி, குருராஜாராவ், தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ரதம் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கி திங்கள்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தை சென்றடைகிறது. அங்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ரதத்துக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முன்னதாக, சேத்துப்பட்டு வழியாக வந்த யாத்திரை ரதத்தை மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

