எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: எ.வ.வேலு எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சியின் 39 வார்டுகளிலும் தூய்மை அருணை திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி, மரக்கன்று நடும் பணிகள் நடைபெற்றன.

Updated On :5 நவம்பர் 2018, 9:27 am IST

திருவண்ணாமலை நகராட்சியின் 39 வார்டுகளிலும் தூய்மை அருணை திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி, மரக்கன்று நடும் பணிகள் நடைபெற்றன.
 இந்தப் பணிகளை தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை, தாமரை நகரில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணியை அவர் பார்வையிட்டார். பின்னர், நகரின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடி அடங்கிய பொட்டலங்களை எ.வ.வேலு வழங்கினார்.
 நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி, ப.கார்த்திவேல்மாறன், சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன், ர.செல்வராஜ், ரா.ஜீவானந்தம், குட்டி க.புகழேந்தி, மா.சின்ராஜ், அ.அருள்குமரன், ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.