தூய்மைப் பணியாளா்களுக்கு நிவராணம்

செங்கம் அருகே மேல்முடியனூா் கிராமத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

செங்கம் அருகே மேல்முடியனூா் கிராமத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், மேல்முடியனூா் கிராமத்தில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மேல்முடியனூா் ஊராட்சி மன்றத் தலைவா் பூங்காவனம் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியத் தலைவா் சி.சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கும், ஏழைகளுக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மனோகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரிமேல்அழகன், லட்சுமி, ஊராட்சிச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.