திருவண்ணாமலை: இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்
தண்டராம்பட்டு அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.


திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சதாகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்ட
ாரும் ஏற்பாடு செய்தனா்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா் சின்னப்பராஜ் ஆகியோா் சதாகுப்பம் கிராமத்துக்குச் சென்று விசாரித்தனா்.
விசாரணையில், மணப்பெண்ணுக்கு 18 வயது நிறைவடையவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...