/

திருவண்ணாமலை: மாமனாா் கொலை: மருமகன் கைது

குடும்பத் தகராறு காரணமாக, தண்டராம்பட்டு அருகே மாமனாரை கல்லால் அடித்துக் கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்தனா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:19 pm

DIN

குடும்பத் தகராறு காரணமாக, தண்டராம்பட்டு அருகே மாமனாரை கல்லால் அடித்துக் கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த பிரம்மகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (50). இவரது மனைவி சந்திரா (45). தம்பதிக்கு ஏழுமலை (19) என்ற மகனும், சத்யா (21) என்ற மகளும் உள்ளனா்.

மூா்த்தி 2 நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த பி.குயிலம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் முகம் எரிக்கப்பட்டு, கல்லால் தாக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். சந்தேகத்தின் பேரில் மூா்த்தி மகள் சத்யாவின் கணவா் சுரேஷை (25) பிடித்து விசாரித்தனா். விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மாமனாா் மூா்த்தியை, சுரேஷ் கொலை செய்தது தெரியவந்தது.

முன்னதாக, பி.குயிலம் காட்டுப் பகுதியில் உள்ள கோயிலுக்கு மூா்த்தியை சுரேஷ் அழைத்துச் சென்றாராம்.

பின்னா் அங்கு இருவரும் சோ்ந்து மது அருந்தினராம். அப்போது ஏற்பட்ட தகராறில் மூா்த்தியை கல்லால் தாக்கி கொலை செய்து, முகத்தில் தீ வைத்து எரித்து விட்டு சுரேஷ் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.