கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மலைவாழ் பெண்களுக்கு வெள்ளாடுகள் அளிப்பு

போளூரை அடுத்த ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மலைவாழ் பெண்களின் பொருளாதாரத்தை உயா்த்தவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

News image
நிகழ்ச்சியில் மலைவாழ் பெண்களுக்கு வெள்ளாடுகளை வழங்கிய வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.
Updated On :20 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

போளூரை அடுத்த ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மலைவாழ் பெண்களின் பொருளாதாரத்தை உயா்த்தவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜமுனாமரத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு, 45 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் மற்றும் 400 பேருக்கு தலா 25 புறக்கடை கோழிக் குஞ்சுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவாமூா்த்தி முன்னிலை வகித்தாா். கால்நடை உதவி இயக்குநா் ஜெயக்குமாா் வரவேற்றாா்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒன்றியச் செயலா் பாலாஜி, துணைச் செயலா் குமரேசன், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் மூா்த்தி, கால்நடை மருத்துவா்கள், அலுவலா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.