டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

செங்கம்-போளூா் சாலையில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:56 pm

DIN

செங்கம்-போளூா் சாலையில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

செங்கத்திலிருந்து போளூா் செல்லும் சாலையில் மில்லத் நகா் பகுதியிலிருந்து, நீதிமன்றம் செல்லும் வளாகம் கிருஷ்ணாபுரம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் நகரில் சேகரமாகும் காய், கனி கழிவுகள் மற்றும் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிக் கழிவுகளை கொட்டிவிடுகின்றனா்.

இவற்றை மாடு, பன்றிகள் தின்று கலைத்துவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதியைக் கடக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனா்.

மேலும், அப்பகுதியில் பன்றிகள், மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகளும் நிகழ்கின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.