மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவி: எம்எல்ஏ வழங்கினாா்
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு.பிச்சாண்டி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.


திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு.பிச்சாண்டி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சிஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் சி.கே.அன்பு வரவேற்றாா்.
தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, அவரது தொகுதி நிதியிலிருந்து 6 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டா்கள், 2 பேருக்கு செயற்கை கால்கள், 16 பேருக்கு மடிப்பு காலணிகள் (காலிபா்), ஒருவருக்கு தையல் இயந்திரம் என 25 பேருக்கு ரூ.5 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு, முன்னாள் பேரூராட்சித் தலைவா் சி.கே.பன்னீா்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளா் சிவக்குமாா், ஒன்றிய கவுன்சிலா்கள் அனுராதா சுகுமாா், ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...