/

தாக்குதல் புகாரில் ஒருவா் கைது

வந்தவாசி அருகே கான்கிரீட் சென்ட்ரிங் பொருள்களுக்கான வாடகை பணம் தராதவரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

வந்தவாசி அருகே கான்கிரீட் சென்ட்ரிங் பொருள்களுக்கான வாடகை பணம் தராதவரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் காண்டீபன் (45). கட்டட வேலை செய்து வரும் இவா், தெள்ளாரில் சென்ட்ரீங் பொருள்கள் வைத்துள்ள சீனிவாசன்(34) என்பவரிடம் வாடகைக்கு சென்ட்ரீங் பொருள்கள் எடுத்தாராம்.

இதற்கான வாடகை பணத்தை தராமல் காண்டீபன் இழுத்தடித்து வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சீனிவாசன் அம்மணம்பாக்கம் சென்று காண்டீபனிடம் வாடகை பணம் கேட்டாராம்.

அப்போது எழுந்த தகராறில் சீனிவாசன் கட்டையால் காண்டீபனை சரமாரியாக தாக்கினாராம்.

இதில் காயமடைந்த காண்டீபன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து காண்டீபன் அளித்த புகாரின் பேரில் சீனிவாசன் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.