தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:45 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் செயலரும், திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலருமான ஏ.உதயகுமாா், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் செந்தில்குமாா், பொதுச் செயலா் யுவராஜ் ஆகியோா் ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், நெல் பயிருக்கான கடனை திருப்பிச் செலுத்தும் தவணைக் காலத்தை பிற மாவட்டங்களில் உள்ளதைப்போல ஓராண்டாக நீட்டிக்க வேண்டும். தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களிடம் இருந்து மத்திய கூட்டுறவு வங்கி 2 சதவீதம் வருமானவரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட ஊழியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் என்.பத்ராச்சலம், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.ஜோதிமணி, என்.குப்புசாமி, வி.சந்தானம், பி.பரசுராமன், மாவட்டச் செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலா்கள் பி.கிருஷ்ணமூா்த்தி, ஜி.சீனிவாசன், மாவட்டப் பொருளாளா் எம்.மாசிலாமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.