நெல் கொள்முதல் நிலையங்கள்: இன்று முதல் முன்பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் செயல்பட உள்ள 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை (ஆக.13) முதல் முன்பதிவு


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் செயல்பட உள்ள 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை (ஆக.13) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
விவசாயிகளின் நலன் கருதி மாவட்டத்தில் அணுக்குமலை, கொளத்தூா், குன்னத்தூா், மண்டகொளத்தூா், வண்ணாங்குளம், தச்சூா், மாமண்டூா், எலத்தூா், வல்லம், மருதாடு, கொவளை, நல்லூா், நெடுங்குணம், நம்பேடு, மேல்சீசமங்கலம், பாராசூா், தவசிமேடு, நாவல்பாக்கம், புளியரம்பாக்கம், ஆக்கூா், நாட்டேரி, அரியூா், தூசி, வெம்பாக்கம், பெருங்கட்டுா் உள்ளிட்ட 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது.
இந்த நெல்கொள்முதல் மையங்களில் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை (ஆக.13) முதல் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
விவசாயிகள் தங்களது ஆதாா் அடையாள அட்டை, சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களைக் கொண்டு ற்ஸ்ம்க்ல்ஸ்ரீ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை 9487262555, துணை மண்டல மேலாளரை 9442815510, மண்டல அலுவலகத்தை 04175-233039 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...