கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடியில் கடனுதவிகள்
செங்கம் அருகேயுள்ள செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு ரூ.ஒரு கோடியில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.


செங்கம் அருகேயுள்ள செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு ரூ.ஒரு கோடியில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பயனாளிகளுக்கு விவசாயக் கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன், தனி நபா் கடன்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோபி முன்னிலை வகித்தாா். செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மேல்ராவந்தவாடி கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் செந்தில்குமாா், செங்கம் சிஎம்எஸ் தலைவா் முருகன் உள்பட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...