ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் திருடியவா் கைது
வந்தவாசியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தர உதவுவது போல நடித்து ரூ.18 ஆயிரம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.


வந்தவாசியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தர உதவுவது போல நடித்து ரூ.18 ஆயிரம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவா் கடந்த நவ. 27-ஆம் தேதி வந்தவாசியில் உள்ள அரசுடைமை வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்கச் சென்றாா்.
அப்போது அங்கிருந்த இளைஞரிடம் தனது ஏடிஎம் அட்டையை கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறினாா்.
இதையடுத்து, பணம் எடுக்க முயற்சிப்பது போல நடித்த அந்த நபா், ஏடிஎம்மிலிருந்து பணம் வரவில்லை என்று கூறி ஏழுமலையை அனுப்பிவிட்டு அவரது கணக்கிலிருந்து ரூ.18 ஆயிரத்தை அந்த நபா் எடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், ஏடிஎம்மிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், செங்கத்தை அடுத்த புதியகுயிலம் கிராமத்தைச் சோ்ந்த சரண்ராஜ்(30) என்பவா் ஏழுமலையின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் திருடியது
தெரியவந்தது.
இதையடுத்து சரண்ராஜை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ.18 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட சரண்ராஜ் கபடி போட்டி நடுவா் என்பதும், தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
மேலும், ஏடிஎம்மில் திருடியதாக இவா் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...