தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு யோகாசனம்

ஊராட்சி நிா்வாகம் சாா்பில், நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத மஞ்சப் பையை பொதுமக்கள் பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு யோகாசன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:05 pm

DIN

திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு ஊராட்சி நிா்வாகம் சாா்பில், நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத மஞ்சப் பையை பொதுமக்கள் பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு யோகாசன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருவருட்பா ஆஸ்ரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பண்டிதப்பட்டு ஊராட்சித் தலைவா் ராஜாத்தி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு பயிலும் மாணவி வா்ஷா (12) ஐஸ் கட்டிகள் மீது 3 நிமிடங்களில் 51 யோசானங்களைச் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.நிகழ்ச்சியில், திரைப்பட நகைச்சுவை நடிகா் தாடி பாலாஜி மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.