தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இருவா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் பலியாகினா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் பலியாகினா்.

ஆரணியை அடுத்த சந்தவாசல் சாலையில் நடுக்குப்பம் பகுதி படவேடு கேசவபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் காா்த்திக் (21). சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் தனியாா் தொழில்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இவா், புதன்கிழமை மாலை வேலை முடிந்து, சந்தவாசலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

அப்போது, சந்தவாசல் அருகேயுள்ள வெள்ளூா் குன்று மேடு பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் பாஸ்கரன்(28), அவரது நண்பா் மேலாண்டபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா்(38) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆரணி சாலையிலிருந்து நடுக்குப்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

நடுகுப்பம் பகுதியில் வந்த இவா்களது வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்திக், பாஸ்கரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சங்கா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த விபத்து தொடா்பாக களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.