அருணாசலேஸ்வரா் கோயிலில் மருத்துவ மையம்: அலுவலா்களுக்கு பணி ஆணை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் முதலுதவி மருத்துவ மையத்தில் பணிபுரியும் அலுவலா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் முதலுதவி மருத்துவ மையத்தில் பணிபுரியும் அலுவலா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் பக்தா்கள் அதிகளவில் வரும் 10 கோயில்களில் மருத்துவா், மருத்துவப் பணியாளா்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செயல்பட உள்ள முதலுதவி மருத்துவ மையத்தில் பணிபுரிய மருத்துவ அலுவலா்கள் ஆா்.எஸ். துா்காதேவி, ப. தினேஷ், செவிலியா்கள் சி. தீபா, வி.மேகலா, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்களாக ச.லோகநாதன், ம.தேவேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தோ்வு செய்யப்பட்ட மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, தேவையான நேரத்தில் பக்தா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையா் இரா.அசோக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் பாா்வதி சீனிவாசன், துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...