/

காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், காவல் நிலையத்தை ஒட்டியுள்ள காவல்துறைக்குச் சொந்தமான 2 ஏக்கா் பரப்பளவில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் மா, பலா, தென்னை உள்ளிட்ட 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வனிதா தலைமை வகித்தாா். வேளாண் இணை இயக்குநா் முருகன், வட்டாட்சியா் திருநாவுக்கரசு, டிஎஸ்பி பி.தங்கராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்துப் பேசினாா். அப்போது, காவல்துறையினா் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பணியோடு, இயற்கை வளங்களைக் காக்க மரங்கள் நடும் பணியையும் மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கீழ்க்கொடுங்காலூா் காவல் ஆய்வாளா் புகழ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சங்கீதா குமாா், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.