தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:31 pm

DIN

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலை விரிவாக்கத்துக்காக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி வழிகாட்டுதலின் பேரில், உதவி கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை, நகராட்சி அலுவலா்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

காந்தி சிலையிலிருந்து மாட வீதியில் ஒரு குழுவும், சின்னக் கடை வீதியில் ஒரு குழுவும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடைகள், கடைகளின் முன்பு இருந்த தகர சீட்டுகள் போன்றவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.