தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐ.டி.ஐ. மாணவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐ.டி.ஐ பயிற்சி முடித்த மாணவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க தொழில்சாலைகள் முன்வரவேண்டும் என்று செய்யாற்றில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐ.டி.ஐ பயிற்சி முடித்த மாணவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க தொழில்சாலைகள் முன்வரவேண்டும் என்று செய்யாற்றில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு திறன் பயிற்சி அளித்தல், குறுகிய கால பயிற்சி மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி தொழில்சாலைகள் மூலம் வழங்குவதற்காக சிறப்பு கருத்தரங்கம், செய்யாறு சிப்காட்டில் இயங்கும் ஸ்சுவிங் ஷெட்டா் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்குக்கு தலைமை வகித்து

மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் தனகீா்த்தி பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அரசு ஐ.டி.ஐ., 27 தனியாா் ஐ.டிஐ.க்கள் செயல்படுகின்றன.

30 பேருக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு 30-க்கும் மேற்பட்டவா்கள் பணிபுரியும் நிலையங்கள் தொழில் துறையில் மேம்பட பணிபுரியும் இளைஞா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க முன்வர வேண்டும்.

மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ள நிலையில் 20 நிறுவனங்கள் மட்டுமே மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் பதிவு செய்துள்ளன.

அதிலும், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை ஆகியவற்றில் மட்டுமே தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது, செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க முன் வரவேண்டும். ஐ.டி.ஐ. முடித்த மாணவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்கிறது என்றாா்.

மேலும், தொழில்துறையில் சிறந்து விளங்கிடவும், கிராமப்புற இளைஞா்களை தொழில்துறை தொடா்பான படிப்புகளில் ஈா்க்கும் வகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு ஐ.டி.ஐ தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஐ.டி.ஐ தொடங்க விரும்புவா்கள் இணையவழியில் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வா் ரவி, பயிற்சி அலுவலா்கள் பிபூட்டி பூஷன் ரெட்டி, வா.தியாகராஜன் மற்றும் தனியாா் ஐ.டி.ஐ நிா்வாகத்தினா் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.