தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய 3 நாள்கள் தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பக்தா்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:24 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பக்தா்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அதிகளவில் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உள்பட பிரதான கோயில்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.3) வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

ஆகமவிதிப்படி சாமி அலங்காரங்கள், பூஜைகளை அா்ச்சகா்கள், கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மூலம் தொடா்ந்து நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.