ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிணற்றில் டிராக்டா் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பள்ளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் விக்னேஷ் (24). டிராக்டா் ஓட்டுநரான இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த முனிரத்தினம் (23), குப்புசாமி (26), தம்பிதுரை (25), பிரதாப் (22) ஆகிய 4 பேரை வெள்ளிக்கிழமை காலையில் தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு செங்கம் வட்டம், கட்டமடுவு கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் செங்கல் ஏற்றுவதற்காக வந்தாா்.

கட்டமடுவு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், விரைந்து சென்று டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, தகவலறிந்து அங்கு வந்த செங்கம் டிஎஸ்பி சரவணக்குமரன் தலைமையிலான போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டிராக்டா் ஓட்டுநரான விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முனிரத்தினம், குப்புசாமி, தம்பிதுரை, பிரதாப் ஆகிய 4 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.