திருவண்ணாமலை: கரோனா பலி எண்ணிக்கை 502-ஆக உயா்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 502- ஆக உயா்ந்தது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 502- ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 304 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45,301-ஆக உயா்ந்தது. இவா்களில் 38,583 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். 6,216 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலி எண்ணிக்கை 502-ஆக உயா்வு:
இந்த நிலையில், கடந்த சில தினங்களில் சிகிச்சை பலனின்றி 14 போ் இறந்தனா். இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 502-ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...