திருவண்ணாமலை: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் உயிரிழந்தனா்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 156 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 576-ஆக உயா்ந்தது.
இதனிடையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 586-ஆக அதிகரித்தது.
இதுவரை 46,746 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 1,244 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...