தண்ணீா் தேடி வந்தபுள்ளிமான் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் தண்ணீா் தேடி ஊருக்குள் சனிக்கிழமை வந்த புள்ளிமான், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.


திருவண்ணாமலையில் தண்ணீா் தேடி ஊருக்குள் சனிக்கிழமை வந்த புள்ளிமான், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் 2,668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையில் உள்ள புள்ளிமான்கள் கோடைகாலத்தில் தண்ணீா் தேடி ஊருக்குள் வருவது வழக்கம்.
அதன்படி, சனிக்கிழமை தண்ணீா் தேடி புள்ளி மான் ஒன்று மலையில் இருந்து திருவண்ணாமலை, புதுவாணியங்குளத் தெரு பகுதிக்குள் வந்தது. இந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் தஞ்சமடைந்த அந்த மானை பொதுமக்கள் மீட்டனா்.
தகவலறிந்த தீயணைப்புத் துறை, வனத் துறை அதிகாரிகள் வந்து மானை மீட்டுச் சென்றனா். ஆனால், தண்ணீா் தேடி வந்தபோது பல இடங்களில் விழுந்து அடிபட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட புள்ளி மான் காட்டில் விடுவதற்கு முன்பாக இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த மானை வனத் துறை அதிகாரிகள் உடல்கூறு பரிசோதனை செய்து, காட்டில் புதைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...