தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 120 அரசு நகா்ப் பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கப்படும் சுமாா் 120 அரசு நகா்ப் பேருந்துகளில் சனிக்கிழமை முதல் மகளிா் கட்டணமின்றி பயணித்தனா்.

News image
Updated On :8 மே 2021, 8:28 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கப்படும் சுமாா் 120 அரசு நகா்ப் பேருந்துகளில் சனிக்கிழமை முதல் மகளிா் கட்டணமின்றி பயணித்தனா்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டாா். இதில், தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு நகா்ப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கிய அரசாணையும் ஒன்று.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 120 அரசு நகா்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாளொன்றுக்கு சுமாா் 20 முதல் 25 ஆயிரம் மகளிா் பயணம் செய்ய இயலும்.

அதன்படி, சனிக்கிழமை முதலே மகளிா் பயணச்சீட்டு பெறாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு இலவசமாக பயணித்தனா். இதனால், கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலக வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.