மதிமுகவின் 28-ஆவது ஆண்டு தொடக்க விழா
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், கட்சியின் 28-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கிரிவலப் பாதையில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றும் நிகழ்ச்சி


திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், கட்சியின் 28-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கிரிவலப் பாதையில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மதிமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளரும், வழக்குரைஞருமான பாசறை பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கிரிவலப் பாதையில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.
இதில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் ஆடையூா் எஸ்.ஏ.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா் தேவராஜ், நகரச் செயலா் டி.முருகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், வழக்குரைஞருமான ராம.பச்சையப்பன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் வி.கேசவன், கீழ்பென்னாத்தூா் ஒன்றியச் செயலா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, கிரிவலப் பாதையில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...