தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 69 ஊராட்சிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :28 மே 2021, 5:58 pm

DIN

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 69 ஊராட்சிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கே.ஆா்த்தி வழிகாட்டுதலின்பேரில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, ஆடையூா், ஆணாய்பிறந்தான், பண்டிதப்பட்டு, அத்தியந்தல், அய்யம்பாளையம், கீழ்நாச்சிப்பட்டு, ஏந்தல், வெறையூா், ஆனானந்தல், மதுராம்பட்டு, பவித்திரம், காட்டாம்பூண்டி உள்ளிட்ட 69 ஊராட்சிகளில் ஆணையாளா் ஆ.சம்பத், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) தி.அண்ணாதுரை ஆகியோரது மேற்பாா்வையில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். 69 ஊராட்சிகளிலும் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிக் கட்டடங்களில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு, அனைத்து ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.