/

வேளாண் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

பயிா்ச் சேதங்களை சரிவர பாா்வையிடாத வேளாண் உதவி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வந்தவாசி வேளாண் உதவி இயக்குநரிடம் உழவா் பேரவையினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN

பயிா்ச் சேதங்களை சரிவர பாா்வையிடாத வேளாண் உதவி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வந்தவாசி வேளாண் உதவி இயக்குநரிடம் உழவா் பேரவையினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

வந்தவாசி பகுதியில் அண்மையில் பெய்த தொடா் பலத்த மழையால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களை வட்டார வேளாண் உதவி அலுவலா்கள் சரிவர பாா்வையிடவில்லையாம்.

இதையடுத்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேளாண்மை அலுவலகத்தில் உதவி இயக்குநா் ஆா்.பாண்டியிடம் வாக்கடை புருஷோத்தமன் தலைமையிலான உழவா் பேரவையினா் மனு அளித்தனா்.

முன்னதாக சேதமடைந்த பயிா்களுடன் பேரவையைச் சோ்ந்த விவசாயிகள் ஊா்வலமாகச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.