மோடி பிறந்த நாள் விழா
பிரதமா் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.


பிரதமா் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் சாசா வெங்கடேசன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடக்கிவைத்தாா். இதில், 200-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் பி.கோபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட பொதுச் செயலா்கள் எஸ்.கோவிந்தராஜ், முருகானந்தம், இளைஞரணி துணைத் தலைவா் ஜெ.நடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி: வந்தவாசி தேரடி மற்றும் செம்பூரில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் பி.பாஸ்கரனும், அம்மையப்பட்டில் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் வி.குருலிங்கமும், வந்தவாசி பயணியா் விடுதி அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஏ.ஜி.துரை நாடாரும், சென்னாவரத்தில் மாவட்ட துணைத் தலைவா் முத்துசாமியும் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...