மின் தடையால் அவதி: கிராம மக்கள் சாலை மறியல்
கீழ்பென்னாத்தூா் அருகே அடிக்கடி ஏற்படும் மின் தடையைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கீழ்பென்னாத்தூா் அருகே அடிக்கடி ஏற்படும் மின் தடையைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. இதேபோல, புதன்கிழமை இரவும் மின் தடை ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவு 12.15 மணி முதல் 12.45 மணி வரை 30 நிமிடங்களுக்கும் மேலாக திருவண்ணாமலை - சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், சாலை மறியல் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய விஜயகுமாா் உள்பட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...