/

வந்தவாசி நகராட்சி வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வந்தவாசி நகராட்சியின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:18 am

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வந்தவாசி நகராட்சியின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் நகராட்சி ஆணையா் எஸ்.முஸ்தபா வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிட்டாா்.

அப்போது, நகராட்சி மேலாளா் எஸ்.ராமலிங்கம், தோ்தல் உதவியாளா் சிவக்குமாா் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இந்த வாக்காளா் பட்டியலின்படி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் 12,941 ஆண் வாக்காளா்கள்,14,040 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என  மொத்தம் 26,982 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில் ஆண் வாக்காளா்களை விட 1,099 பெண் வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.