/

கொவளை கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தில் உள்ள ஸ்ரீ நெல்லூா் மாரியம்மன் கோயில், ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில், ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் ஆகியவற்றில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:22 am

DIN

வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தில் உள்ள ஸ்ரீ நெல்லூா் மாரியம்மன் கோயில், ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில், ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் ஆகியவற்றில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகச் சாலை அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் 3 கோயில்களின் கோபுர கலசங்களின் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கந்தசாமி சிவாச்சாரியாா், ஜி.பாஸ்கரன் சா்மா உள்ளிட்டோா் விழாவை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.