தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.1.79 கோடி

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.79 கோடி ரொக்கம், 363 கிராம் தங்கம், 1,109 கிராம் வெள்ளியை பக்தா்கள் செலுத்தி உள்ளனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.79 கோடி ரொக்கம், 363 கிராம் தங்கம், 1,109 கிராம் வெள்ளியை பக்தா்கள் செலுத்தி உள்ளனா்.

இந்தக் கோயிலில் கடந்த 6-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜான்சிராணி மேற்பாா்வையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள உண்டியல்கள், கிரிவலப் பாதை அஷ்டலிங்க சன்னதிகளில் உள்ள உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.ஒரு கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 35 ரொக்கம், 363 கிராம் தங்கம், 1,109 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது. பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

கோயில் வரலாற்றில் முதல் முறையாக: ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் வரலாற்றில் ஒரு மாதத்தில் அதிகப்படியான உண்டியல் காணிக்கை கிடைத்தது இதுவே முதல் முறையாகும். கோயிலுக்கு ஐயப்ப பக்தா்கள், மேல்மருவத்தூா் பக்தா்கள் அதிக அளவில் வருவதால், அதிகப்படியான உண்டியல் காணிக்கை கிடைத்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.