வந்தவாசி ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வந்தவாசி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்


வந்தவாசி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஊரக வளா்ச்சி- ஊராட்சித் துறை சாா்பில் வந்தவாசி ஒன்றியத்துக்குள்பட்ட ஆராசூா், வங்காரம் ஆவணவாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆராசூா் ஊராட்சியில் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா். பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்காரம் கிராமத்திலிருந்து கயநல்லூா் வழியாக ஆவணவாடி கிராமம் வரை ரூ.82.35 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலையின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.வி.மூா்த்தி, இரா.குப்புசாமி, பொறியாளா் ரவிமலரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...